போராட்டம்
ஜூலை 14, 2010 கருத்துத் தெரிவிக்கவும்
போராட்டம்
மனதிற்குள் போராட்டம்….
பொய்க்கும் உண்மைக்கும் போராட்டம்
வறுமைக்கும் செல்வத்திற்கும் போராட்டம்
கற்பனைக்கும் நிஜத்திற்கும் போராட்டம்
எண்ணத்திற்கும் நிகழ்விற்கும் போராட்டம்
உண்மையை ஏற்க மனம் மறுக்கின்றது
செல்வம் அடைவதற்கு தேவை நேர்மையா ?
உண்மையை ஏற்க மனம் மறுக்கின்றது
கனவை அடைவதற்கு தேவை கற்பனையா?
உண்மையை ஏற்க மனம் மறுக்கின்றது
நிகழ்வை அடைவதற்கு தேவை என்னமா ?
யாரேனும் உண்மையை உணர்த்துங்களேன்??? மனதிற்குள் போராட்டம்….