புதியவர்களுக்கு – டிவிட்டர் (Twitter)
ஜனவரி 20, 2010 1 மறுமொழி
ட்விட்டர் என்பது ஒரு சமுதாய வலைமனை(Social Networking) வேப்சைட். இது ஒருவர் எளிய முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு வலைத்தளம் என்று கூறலாம். இந்த தளத்தின் வாயிலாக ஒருவர் அல்லது பலர் நம்மை இணைய வழியில் பின் தொடரலாம், இவர்களை நாம் போல்லோவேர்ஸ் (followers) என்று அழைக்கிறோம். நாம் வேறு நபர்களையும் ப்போல்ளா (follow) செய்யலாம். இவ்வாறு நாம் பல நபர்களுடன் இனையவும் இணைக்கவும் உதுவும் தளமே ட்விட்டர். இது செல்பேசி இணைப்பும் கொண்டுள்ளது இதன் சிறப்பு. மேலும் இதில் 146 வார்த்தைகளுக்கு மிகாமல் தகவல் பரிமாறிக்கொள்ளலாம்.
பயன்பாடு எடுத்துகாட்டு:
௧. நீங்கள் ஒரு வார காலம் மதுரையிலிருந்து சென்னை செல்வதாகக் வைத்துக்கொள்வோம். நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரிவிக்க ட்விட்டர் பயன்படுத்தலாம். நீங்கள் ட்விட்டர் மூலமாக கொடுக்கும் தகவல் அல்லது மெசேஜ் உங்களை தொடருபவர்களுக்கு(followers) உடனே சென்று சேரும்.
௨. நீங்கள் உங்கள் நண்பரையோ அல்லது ஒரு நபரையோ பின் தொடர்வதின் மூலம் உங்களுக்கு அவரை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் அறிய இயலும்.
நாம் இதனை பயன்படுத்த நாம் இந்த தளத்திற்கு சென்று ஒரு பயனாளியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த தளத்தின் முகவரி http://www.twitter.com.
சசி தரூர், ஒபாமா போன்ற சில பிரபலங்கள் இதனை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.நான் இதனை எழுதும் நேரத்தில் பில் கேட்ஸ்க்கு 1000000 தொடருபவர்கள் (followers) என்பது செய்தி.

Good