தமிழா..புறப்படு..கொண்டாடு…

இந்த பொங்கல் திருநாள் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டாகவும் இந்த வருடம் முதல் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் சூர்ய தளங்களுக்கு சென்று வழிபடுவது நன்று.இந்த வருடம் தை அம்மாவாசையும் இதே தினத்தில் வருவது இன்னொரு சிறப்பு.
நம்மில் பெரும்பாலும் வெளிநாடுகளிலும் , வெளியூர்களிலும் வேலை நிமித்தம் இருப்பதால் பொங்கல் திருநாளை அவ்வளவு சிறப்பாக கொண்டாட முடியுமா என்றல் அது கேள்விக்குறியாக இருக்கும். இந்த வேலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு தமிழக அரசு சற்றே முயற்சி எடுத்து இதனை சிறப்பாக கொண்டாட முயல்வது பாராட்டுக்கு உரியது.
விவசயிகளுக்கான ஒரு பண்டிகையாக பொங்கல் இருந்தாலும் அவர்கள் மென் மேலும் உயரவும் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் இப்பண்டிகை ஒரு ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நாம் அனனவரும் இணையம் பயன்படுத்தும் இவ்வேளையில் நாம் இணையத்தை விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் நாம் நம்மால் இயன்ற உதவிகளை இணையம் மூலமாக செய்ய இயலும்.
நாம் பலவாறு  பொருள் தேடி அலையும் வேளையில் உழவர்கள் சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நம் கதி என்னவென்றும், என்னவாகும் என்று  கொபெங்கேன் மாநாடு அறிவித்தது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் உலகம் சுழல, சுழலும் உழவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தமிழர்கள் அனைவரையும் இணைக்கும் பொங்கல் திருநாளுக்கு ஒரு நன்றி.
இந்த பொங்கல் திருநாளில் எங்காவது,ஏதவாது ஒரு மரம் நற்று பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்.
பொங்கலோ பொங்கல்..

நன்றி.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.